எம்மை பற்றி

Jothy Healthcare என்பது வெளிநோயாளிகளுக்கான சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகும்

இது மருத்துவ சேவை மட்டும் இன்றி உதவி இல்லாத தனிமையில் இருக்கும் முதியோர் அவரர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் வீட்டிலேயே இருந்து கொண்டு பெறுவதற்கான சேவைகளையும் வழங்குகிறது.

எம்மை பற்றி

Jothy Healthcare  என்பது வெளிநோயாளிகளுக்கான சுகாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகும்,இது நோய்,வயது ,இயலாமை அல்லது பிற உடல்நலச் சாவல்களால் கவனிப்பு மற்றும் ஆதரவைச் சார்ந்திருக்கும் மக்களை அவர்களின் வீட்டுச் சூழலில் பராமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.அடிப்படை பராமரிப்பு சேவைகளில் தனிப்பட்ட சுகாதாரம்,உணவு உண்பது,மற்றும் காயங்களுக்கு மருந்து கட்டுதல் போன்ற நடவடிக்கைகளும் அடங்கும். அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களுக்கு எங்கள் சேவை மூலம் உதவி செய்யலாம்,

எமது இலக்குகள்

  • சுதந்திரத்தை ஊக்குவித்தல்:
அன்றாட நடவடிக்கைகளில் உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் முடிந்தவரை சுதந்திரமாக இருப்பதில் மக்களை ஆதரிக்கின்றது. Jothy Health Care. இது வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் மற்றும் ஆயுளை நீடிக்கும்.உதவிகள் இன்றி தனிமையில் இருக்கும் முதியோர்களை நாங்கள் தினசரி கவனிப்பதன் மூலம் அவர்கள் தனிமையில் இருந்து வெளியே வருவார்கள்.
  • கவனிப்பின் தொடர்ச்சி:
ஒருவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும்,இன்னும் கவனிப்பும் ஆதரவும் தேவைப்படும்போது, Jothy Health Care மருத்துவ சேவையை தடையின்றி ஒப்படைப்பதை உறுதிசெய்யும்.
  • வீட்டில் பராமரிப்பு சேவை:
Jothy Health Care மக்கள் மருத்துவமனை அல்லது பராமரிப்பு வசதிகளுக்குச் செல்வதற்குப் பதிலாக அவர்களுக்குப் பழக்கமான சூழலில் இருக்க உதவுகிறது.இது வாழ்க்கைத் தரத்தையும் நல்வாழ்க்கையும் பராமரிக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை கவனித்தல் மற்றும் இரத்ததில் சர்க்கரை பதிவை பார்த்தல்.ஆகியவற்றை கவனிப்பதன் மூலம் நோய்களின் வீரியத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறோம். அது மட்டுமின்றி நோய்களின் பதிவை நாங்கள் தினசரி எழுதுவதன் மூலம் நோயாளர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது மருத்துவர்ர்கள் இந்த தரவை பார்த்து நோயாளர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • சுதந்திரத்தை பேணுவதற்கான ஆதரவு:
அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளில் கவனிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் மக்கள் தங்களுக்கு பழக்கமான வீட்டுச் சூழலில் இருக்கவும், முடிந்தவரை சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவும் Jothy Health Care உதவுகின்றது.
  • வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்:
Jothy Health Care மருத்துவ மற்றும் சமூக ஆதரவை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது. வலியைக் குறைத்தல்,இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவித்தல் ஆகியவை இதில் அடங்கும். Jothy Health Care சேவைகள் தகுந்த மருத்துவ பராமரிப்பு மற்றும் வீட்டிலேயே கண்காணிப்பதன் மூலம் மருத்துவ மனையில் சேர்வற்தகான தேவையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உறவினர்களுக்கு சுமை குறைத்தல் : 
கவனிப்பு தேவைப்படுவோரின் உறவினர்கள் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உறவினர்கள் தங்கள் பங்கை சிறப்பாகச் சமாளிக்கும் வகையில் தொழில் முறை கவனிப்பையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம் Jothy Health Care அவர்களின் சுமையை குறைக்கின்றது.
  • முழுமையான பராமரிப்பு :
 வாடிக்கையாளர்களின் உடல்,மன மற்றும் சமூக ஆரோக்கியத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும் முழுமையான பராமரிப்பை Jothy Health Care வழங்குகிறது. இதில் உளவியல் ஆதரவு, ஊட்டச்சத்து ஆலோசனை மற்றும் மனநல மேம்பாடு ஆகியவை அடங்கும்.
  • நிர்வாகப்பணிகளுக்கான ஆதரவு:
படிவங்களை நிரப்புதல், ஆவணங்களை ஓழுக்கமைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்களை கையாளுதல் ஆகியவை இதில் அடங்கும்.
  • நாளாந்தம் கவனிப்பு:
பயிற்சி பெற்ற ஊளியர்களின் வழக்கமான வருகைகள் மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வதன் மூலம் Jothy Health Care பராமரிப்பின் செயல்திறனை உறுதி செய்கின்றது. ஒரு நோயாளி மருத்துவரீதியாக அவசர உதவி கோரும் பட்சத்தில் Jothy Health Care உதவிக்கரம் நீட்டும் என்பதை உறுதி செய்கிறோம்.
  • நெறிமுறை கொள்கைகளுடன் இணங்குதல் :
வாடிக்கையாளர்களின் கண்ணியம் மற்றும் சுயாட்சி மற்றும் நோயாளியின் தரவின் ரகசியத்தன்மை போன்ற நெறிமுறைக் கொள்கைகளுக்கு இணங்குவதற்கு Jothy Health Care நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும். நோயாளர்களின் மருத்துவ மற்றும் தனிப்பட தகவல்களை ரகசியம் பேணுவதன்மூலம் நாங்கள் எங்களின் தரமான மற்றும் நம்பிக்கையான சேவையை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இந்த சேவையை நாங்கள் எங்களின் முதியோர்களை அன்பாகவும் பண்பாகவும் பராமரிப்போம் என்பதை மகிழ்ச்சியுடன் உறுதி செய்கின்றோம்.
Jothy Health Care

எமது சேவையை பெற்றிட இன்றே தொடர்புகொள்ளுங்கள்
Book an Appointment